வணக்கம் நண்பர்களே

செவ்வாயில் செயற்கை மரம்!


புதிய கண்டுபிடிப்புகள்: செவ்வாயில் செயற்கை மரம்!

new-discoveries


 எம்.ஐ.டி., ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உத்தியைக் கொண்டு அமெரிக்க விண்வெளித் துறை செவ்வாய்க் கோளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய்க் கோளில் பெர்சிவரன்ஸ் ரோவர் வாகனம் தரை இறங்கியது. இந்த விண்கலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மோக்சி (Moxie) கருவி, ஏப்ரல் 20 அன்று இயக்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில் 5.4 கிராம் ஆக்சிஜனைத் தயார் செய்தது. இந்த அளவு ஆக்சிஜன் ஒரு சராசரி மனிதன் பத்து நிமிடங்களுக்குச் சுவாசிக்கப் போதுமானது. முழு வீச்சில் செயல்படும்போது இந்தக் கருவி மணிக்குப் பத்து கிராம் ஆக்சிஜனைத் தயார் செய்யும்.


பூமியைவிடச் சுமார் 170 மடங்கு குறைந்த அடர்த்தி கொண்டது செவ்வாய் வளிமண்டலம். பூமியில் சுமார் 21 சதவீதம் ஆக்சிஜன், 0.04 சதவீதம் மட்டுமே கார்பன்டை ஆக்சைடு. செவ்வாயில் 96 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு, 0.13 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன்.


செயற்கைத் தாவரம்

விண்வெளியில் மனிதன் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லை. செவ்வாய் உள்படப் பல்வேறு கோள்களின் வளிமண்டலத்திலும் ஆக்சிஜன் இல்லை. பூமியைச் சுற்றி விண்வெளியில் வலம்வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நீரை மின்பகுப்பு செய்து ஆக்சிஜனைப் பெறுகிறார்கள். இந்த முறையில் வெகுவாக ஆற்றலைச் செலவழித்துத்தான் ஆக்சிஜனைப் பெற முடியும். எனவே, மாற்றுவழிகளை ஆராயும்போது இந்தப் புதிய வழியைக் கண்டுபிடித்தார்கள்.

ஒளிச்சேர்கை நிகழ்வின்போது காற்றில் உள்ள கார்பன் டைஆக்சைடை எடுத்துக்கொண்டு, ஆக்சிஜனைத் தாவரங்கள் வெளியிடுகின்றன. அதுபோல் செவ்வாயின் வளிமண்டலத்தில்

உள்ள கார்பன் டைஆக்சைடை எடுத்து, கார்பனைத் தனியாகவும் ஆக்சிஜனைத் தனியாகவும் பிரிக்கிறது மோக்சி. எனவே இதை ‘செயற்கைத் தாவரம்’ என்று அழைகிறார்கள்.

இதில் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. தாவரம் H2Oஎன்கிற நீரையும் CO2என்கிற கார்பன்டை ஆக்சைடையும் எடுத்துக்கொண்டு, சூரியனின் ஆற்றலைப் பயன்படுத்தி குளுக்கோஸைத் தயார் செய்து, ஆக்சிஜனை வெளியிடுகிறது. தாவரம் வெளியிடும் ஆக்சிஜன், நீர் மூலக்கூறிலிருந்து வெளியே வருகிறது. ஆனால், ஒருவித அணு ஆற்றல் கருவியைப் பயன்படுத்திதான் மோக்சி தனக்கு வேண்டிய ஆற்றலைப் பெறுகிறது.

நீரின் மின்னாற்பகுப்பின்போது, மின்னோட் டத்தின் மின்னழுத்தத்தில் நீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜன், ஆக்சிஜனாக உடைந்து போகின்றன. நேர்மின்வாய் (anode) பகுதியில் ஆக்சிஜனும் எதிர்மின்வாய் (cathode) பகுதியில் ஹைட்ரஜனும் வெளிப்படும். அதே மாதிரிதான் மோக்சியும் திடநிலை மின்னாற்பகுப்பு கருவி.

New comments are not allowed.