வணக்கம் நண்பர்களே

சிவன்

 

சிவன் (Śiva)


Shiv parivar hd images download free from our lord shiva wallpaper gallery  to decorate your mobile, computer… | Shiva images hd, Lord shiva hd  wallpaper, Lord shiva

 இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். 

சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார். பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது.

சொற்பிறப்பும் பிற பெயர்களும்

சிவன் என்றால், தமிழில் "சிவந்தவன்" என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள் உண்டு. முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன.[4] எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதல் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் சித்தரிக்கப்படுவதால், பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்.



Lord shiva images hd free download - Wallsnapy


தொன்மங்கள்

ஆதிசக்தி

சைவ மரபில், சிவம் சக்தி ஆகிய இரண்டும், ஒருபெருமுழுமையின், ஒன்றிலொன்று இன்றியமையாதா இரு அம்சங்கள். அவற்றைப் பரசிவம், ஆதிசக்தி என நோக்கும் சைவர்கள், அந்த இரு பேராற்றல்களின் திருவிளையாடல்களாகவே புராணக்கதைகளை நோக்குகின்றனர். தக்கனின் தவத்தால் அவனுக்கு மகளாகப் பிறக்கும், ஆதிசக்தி, "சதிதேவி" என்று அறியப்படுகிறாள். தக்கனின் அனுமதியின்றி சதி சிவனை மணந்ததால் வெகுண்ட தக்கன், அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் யாகம் செய்கின்றான். அங்கு அழைப்பின்றி வந்த சதிதேவியிடம், தக்கன் ஈசனை இழித்துப்பேசுவதால், சதி வேள்வித்தீயில் வீழ்ந்து மறைய, ஆங்காரமுற்ற ஈசனின் திருமுடியிலிருந்து வீரபத்திரர் தோன்றி, யாகத்தை அழிக்கிறார். சதியின் உடல் யாககுண்டத்தில் கிடந்ததாகவும், அதை ஆற்றாமையுடன் ஈசன் தூக்கிச்சென்றபோது, அவற்றை திருமால் ஆழியால் சிதைக்க, அவை வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்களானதாகவும், இக்கதை செல்கின்றது.பின், பர்வதராஜன் மைனாவதியின் தவத்துக்கிரங்கி, சக்தி மீண்டும் பார்வதியாக அவதரிக்கிறாள். கடுந்தவமிருந்து ஈசனைக் கணவனாக அடையும் உமையவள், பின் பல அசுரர்களை அழித்து, தேவர் துயர் தீர்த்தும், பிள்ளையார்முருகன் ஆகியோரைப் படைத்தும், ஈசன் தேவியாக வீற்றிருக்கிறாள்.



Shiva Images, Stock Photos & Vectors | Shutterstock


பிள்ளையார் - முருகன்

கயிலையில் பார்வதி தேவி மானசீகமாக ஒரு குழந்தையைத் தோற்றுவித்தாகவும், சிவபெருமானை அறியாத அக்குழந்தை அவருடன் சண்டையிட்டு தலையிழந்தாகவும், பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று யானைமுகம் பொருத்தி அம்மகனை மீள்வித்தாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. சூரன் என்ற அரக்கனை அழிக்கச் சிவபெருமான் தனது ஆறுமுகங்களிலுள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்புபொறியை உருவாக்கியதாகவும், அந்த ஆறு நெருப்பு பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டதாகவும். அந்த நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறி, அவற்றைக் கார்த்திகைப் பெண்டீர் வளர்த்து வந்ததாகவும் இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. ஆறு குழந்தைகளையும் அன்னையாகிய பார்வதி அரவணைத்த பொழுது ஆறு முகங்களைக் கொண்ட முருகனாக அக்குழந்தை மாறியது.


வரலாறு


சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி முத்திரையே சிவவழிபாட்டின் மூலம் என்று சொல்லப்படுகின்றது.[6][7] மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி மிருகங்கள் இருப்பதாக அமைந்த இந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்பெறுகிறது.

இந்து மதத்தில் ருத்ரன், சிவன் இருவருமே ஒரே கடவுளாகக் கருதப்பெறுகிறார்கள். இந்து மதத்தின் பழமையான ரிக் வேதத்தில் ருத்ரன் கடவுளாகக் கூறப்பெறுகிறார். இவர் வில் அம்பினை ஆயுதமாக உடைய வில்லாளனாகச் சித்தரிக்கப்பெறுகிறார். மேலும் பிரம்மாவிலிருந்து தோன்றியவராகவும், புயல்களின் கடவுளான மருத்துக்களின் தந்தையாகவும் அறியப்பெறுகிறார். அக்னி தேவன்வாயு தேவன்இந்திரன்பிரஜாபதி போன்ற வேதக்கடவுள்களே, பிற்காலத்தில் சிவனாக வளர்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.


சிவ விரதங்கள்

சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.

Sr.விரதம்எப்பொழுது
1சோமவார விரதம்திங்கள்கிழமைகளில் இருப்பது
2உமா மகேஸ்வர விரதம்கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3திருவாதிரை விரதம்மார்கழி மாதத்தில் வருவது
4சிவராத்திரி விரதம்மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5கல்யாண விரதம்பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6பாசுபத விரதம்தைப்பூச தினத்தில் வருவது
7அஷ்டமி விரதம்வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8கேதாரகௌரி விரதம்ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.


புகழ் பெற்ற சிவத்தலங்கள்

சிவபெருமானை மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாகக் கம்போடியாநேபாளம்இலங்கைஇந்தியா எனப் பல நாடுகளைக் கூறலாம். இவற்றினை விடவும் பாரத கண்டம் என்றும் அழைக்கப்படுகின்ற இந்தியாவில் அநேக சிவாலயங்கள் உள்ளன. அவை எண்ணிக்கை அடிப்படையில் பஞ்சபூதத் தலங்கள்பஞ்ச கேதார தலங்கள்பஞ்ச தாண்டவ தலங்கள்பஞ்ச குரோச தலங்கள்ஆறு ஆதார தலங்கள்சப்த விடங்க தலங்கள்,சப்த கரை சிவ தலங்கள்,சப்த கைலாய தலங்கள்அட்டவீரட்டானத் தலங்கள்நவலிங்கபுரம்நவ கைலாயங்கள், எனவும், சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு தேவாரத் திருத்தலங்கள்திருவாசகத் திருத்தலங்கள்தேவார வைப்புத் தலங்கள்திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள்திருவிசைப்பாத் திருத்தலங்கள் எனவும், வன விசேச தலங்கள்முக்தி தரவல்ல சிவத்தலங்கள்சோதிர்லிங்க தலங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது காவிரி தென்கரைத் தலங்கள்காவிரி வடகரைத் தலங்கள்பாண்டிய நாட்டு தலங்கள்கொங்கு நாட்டுத் தலங்கள்நடுநாட்டுத் தலங்கள்தொண்டை நாட்டு தலங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.


மேற்கோள்கள்

  1.  "லிங்க புராணம் பகுதி-1". தினமலர்.
  2.  "லிங்க புராணம் பகுதி-2". தினமலர்.
  3.  http://m.dinamalar.com/temple_detail.php?id=11027.
  4.  சைவ சமயம் நூல் - கொழும்பு விவேகநந்த சபை வெளியீடு சைவ சமய வரலாறு பகுதி பக்கம் 4
  5.  http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! - தினமலர் கோயில்கள்
  6.  "Fish and the God of Waters". www.harappa.com.
  7.  admin (29 April 2014). "The Harappan Civilization by Tarini Carr".
  8. "பவமின்மை யிறவின்மை பற்றின்மை பெயரின்மை
    உவமை யின்மை யொருவினை யின்மை
    குறைவி லறிவுடைமை கோத்திர மின்மையென்
    றிறைவ னிடத்தி லெண்குண மிவையே"
    பிங்கலம்(2 : 6). பவம் (வ.) = பிறப்பு.
  9.  "Tamil Virtual University". www.tamilvu.org.
  10.  "நீக்கமற நிறைந்த சிவன்!". nakkheeran.in.
  11.  "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்". www.thevaaram.org.

வெளி இணைப்புகள்



கோயில்கள்
Previous
Next Post »
New comments are not allowed.